பாஜக கூட்டணியின் முதல் வேட்பாளர்... ஏ.சி சண்முகம் அறிவிப்பு!

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடப் போவதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.  தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே நீடித்து வருகின்றன.  அவற்றிற்கான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூடுதலாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக,  தனது கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.  அதனுடன் புரட்சி பாரதம்,  எஸ்டிபிஐ உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்துள்ளன. புதிய தமிழகம், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவை பொறுத்தவரை அந்த கட்சியில் தற்போது ஐஜேகே, புதிய நீதி கட்சி மட்டுமே உள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளுடன் பாஜகவும் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.  பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே-வுக்கும் வேலூர் தொகுதி புதிய நீதி கட்சிக்கும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் அண்மையில் வேலூர் சென்றிருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “வேலூரில் ஏ.சி. சண்முகம் மீண்டும் போட்டியிடுவது உறுதி. அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் ” என்று பேசினார்.

பாஜக கூட்டணியில் அமமுக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்லப்படும் நிலையில் பாஜக கூட்டணியின் முதல் வேட்பாளராக ஏ.சி. சண்முகம் தன்னை அறிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “வேலூரில் தாமரை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன்” என பகிரங்கமாக அறிவித்தார். 

இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின்  முதல் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் பெயரை அறிவித்து களமிறங்கியுள்ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலிலும் வேலூர் தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டு சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in