யார் அடுத்த பிரதமர்... ஸ்டாலினுக்கும் ஆதரவு - டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

டைம்ஸ் நவ் சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆவதற்கு ஆறு சதவீதம் பேர் ஆதரவு  தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் ஏப்ரல், மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப்  பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.  இந்நிலையில், ஆங்கில செய்திச் சேனலான 'டைம்ஸ்நவ் - இடிஜி அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் மோடி மீண்டும் பிரதமராக 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் பிரதமராக வருவதற்கு17 சதிவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பிரதமராக வருவதற்கு 15 சதவீதம் பேரும், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமராக வருவதற்கு 12 சதவீதம் பேரும், உத்தவ் தாக்கரே பிரதமராக வருவதற்கு 8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரதமராக வருவதற்கு 6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in