கேஜ்ரிவால் இல்லத்தில் மாலிவால் தாக்கப்பட்டது உண்மைதான்: ஆம் ஆத்மி எம்பி தகவல்!

ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை சந்திக்க சென்றபோது அவரது இல்லத்தில் முதல்வரின் தனிசெயலாளர், எம்பி- சுவாதி மாலிவாலை தாக்கியது உண்மைதான் என எம்பி-சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், டெல்லியின் முன்னாள் மகளிர் ஆணைய தலைவருமானவர் சுவாதி மாலிவால். இவர், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவாலை சந்திப்பதற்காக நேற்று சிவில் லைன்ஸில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.

ஆம் ஆத்மி எம்பி- சுவாதி மாலிவால்
ஆம் ஆத்மி எம்பி- சுவாதி மாலிவால்

அப்போது அங்கு முதல்வர் கேஜ்ரிவாலின் தனி செயலாளரான பிபவ் குமார், தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆம் ஆத்மி பெண் எம்பி, முதல்வரின் தனி செயலாளரால் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுவாதி மாலிவாலை, பிபவ்குமார் தாக்கியது உண்மைதான் என ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “நேற்று அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்திக்க மாலிவால் சென்றிருந்தார்.

அவர் அங்கு காத்திருந்தபோது, பிபவ் குமார் அவளிடம் தவறாக நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். கேஜ்ரிவால் இதை கவனத்தில் கொண்டு கடும் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

சுவாதி மாலிவால் மீதான தாக்குதல் சம்பவம் உண்மைதான் என அக்கட்சியின் எம்பி- சஞ்சய் சிங் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரத்தில் கேஜ்ரிவால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை எதிர்பார்த்து எதிர்க்கட்சியினர் காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in