அசாம் மாநிலத்திலும் உடைந்தது இந்தியா கூட்டணி... ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

ஹிமந்தா பிஸ்வா சர்மா - ராகுல் காந்தி
ஹிமந்தா பிஸ்வா சர்மா - ராகுல் காந்தி

மேற்கு வங்கம், பஞ்சாப்பை தொடர்ந்து மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணி உடைந்த மாநிலங்களின் வரிசையில் அசாமும் சேர்ந்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி என்ற குடையின் கீழ் கூட்டணி பங்கீடு மேற்கொண்டு, வேட்பாளர்களை தீர்மானிக்கலாம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் அழைப்புக்கு கடைசி வரை காங்கிரஸ் செவி சாய்க்கவில்லை. கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முனைப்புகள் அசாமில் பலனளிக்கவில்லை என்கிறார் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பியான சந்தீப் பதக்.

அசாமில் ஆம் ஆத்மி கட்சி
அசாமில் ஆம் ஆத்மி கட்சி

”இந்தியா கூட்டணி’யாக தேர்தலை சந்திக்க பல மாதங்களாக பேச்சு வார்த்தைக்கு முயன்றோம். ஆனால் அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. எனவே தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். இந்திய கூட்டணியின் இதர கட்சிகள் எங்கள் வேட்பாளர்களை ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்” என்று சந்தீப் பதக் இன்று தெரிவித்தார். சிறிய மாநிலமான அசாமில், குவஹாட்டி, தில்பர்கா, சோனிபூர் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து, இன்று அசாம் முதல்வராக வீற்றிருக்கிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா. பாஜக சார்பில் ராகுல் காந்தியை சாடுவதில் இவர் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறார். இதனால், ’ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருப்பின் விலகி விடுங்கள்’ என ராகுல் காந்தி அண்மையில் எச்சரிக்கும் அளவுக்கு சர்மா - ராகுல் இடையிலான உரசல் அதிகரித்துள்ளது.

நியாய யாத்திரையின்போது அசாமில் ராகுல் காந்தி
நியாய யாத்திரையின்போது அசாமில் ராகுல் காந்தி

மேலும் ராகுல் காந்தியின் நியாய யாத்திரையின் போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்திக்கும், அவர் உடன் வந்தவர்களுக்கும் பெரும் குடைச்சல்கள் எழுந்ததில் காங்கிரஸ் கட்சி சீற்றம் கண்டிருக்கிறது. முன்னாள் சகாவான சர்மாவின் கோட்டையான அசாமில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது. இதனால் இந்தியா கூட்டணியின் பேரில் முன்வந்த ஆம் ஆத்மியையும் காங்கிரஸ் தவிர்த்துள்ளது. இதனால் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் என்பதால், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் எதிர்பார்ப்புகள் பொய்க்கவும் வாய்ப்பாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in