பஞ்சாப், சண்டிகரின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே போட்டியிடும் - கேஜ்ரிவால் அதிரடி!

அர்விந்த் கேஜ்ரிவால்.
அர்விந்த் கேஜ்ரிவால்.

பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தமுள்ள் 14 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியே போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கத்தில் இந்தியா கூட்டணியை உருவாக்கினார்கள். நிதிஷ்குமார் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டார். தற்போது உ.பியின் முக்கிய கட்சியான ஆர்.எல்.டி கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் இணையவுள்ளார்.

ராகுலுடன் கேஜ்ரிவால்
ராகுலுடன் கேஜ்ரிவால்

அதேபோல திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்து கிலியை கிளப்பினார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து பரபரப்பை உருவாக்கினார்.

இந்நிலையில், பகவந்த் மானின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருள்கள் வீட்டு வாசலில் வழங்கும் திட்டத்தை அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது, “இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சட்டசபை தேர்தலில் உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது. 117 இடங்களில் 92 இடங்களை ஆம் ஆத்மி பெற்று பஞ்சாபில் சாதனை புரிந்தது. தற்போது மக்களவைத் தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது.


அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இன்று மீண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை நாடி வந்திருக்கிறேன். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டீகரில் ஒரு இடமும் என மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி வரும் 10-15 நாள்களுக்குள் 14 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்றோரும் தனித்து செயல்படுவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in