மோடி மீண்டும் பிரதமராக 64% பேர் ஆதரவு; ராகுல் பக்கம் 21.8% பேர்... வெளியானது புதிய சர்வே!

பிரதமர் மோடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடி - ராகுல் காந்தி

பிரதமராக மோடியே தொடர வேண்டும் என 64 சதவீதத்தினரும், பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 21.8 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்று புதிய சர்வேயின் முடிவுகள் வெளிவந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் டிவி 9 தனியார் செய்தி நிறுவனத்துடன் டெய்லிஹண்ட் இணைந்து நாடு முழுவதும் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மோடி மற்று ராகுல்
மோடி மற்று ராகுல்

இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 77 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆன்லைனில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பிரதமராக மோடியே தொடர வேண்டும் என 64 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 21.8 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக/தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என 63 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் வாரியாக பார்க்கும்போது, டெல்லியில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 57.7 % பேரும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 24.2 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் மோடிக்கு ஆதரவாக 78.2 சதவீதத்தினரும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 10 சதவீதத்தினரும் கூறியுள்ளனர். மேற்குவங்கத்தில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 62.6 சதவீதத்தினரும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 19.6 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி
பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி

தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவாக 43.2 சதவீதத்தினரும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 44.1 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். கேரளாவில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 40.8 சதவீதம் பேரும், ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 40.5 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 60.1 சதவீதத்தினரும், ராகுல் காந்தி, பிரதமராக வர வேண்டும் என 26.5 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் பிரதமர் மோடி 71.8% பேரும், ராகுல் காந்திக்கு 17.9% பேரும், சந்திரபாபு நாயுடுவுக்கு 7.4% பேரும் ஆதரவளித்துள்ளனர்.

தேசிய அவசர காலங்களில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டதாக 63.6% பேர் கூறியுள்ளனர். 20.5% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக 61 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர், 21 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

53.3% பேர் பிரதமர் மோடியின் பொருளாதார நிர்வாகம் 'மிகவும் சிறப்பாக உள்ளது' என்றும், 20.9% பேர் இது 'சிறப்பாக இருக்கவேண்டும்' என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் 52.6% பேர் திருப்தி அடைந்துள்ளனர், 28.1% பேர் அதிருப்தி அடைந்துள்ளனர். 64% பேர் பிரதமர் மோடியின் வெளியுறவு விவகாரங்களைக் கையாளும் விதம் 'மிகவும் நன்றாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளனர். 53.8% பேர் மத்திய அரசின் நலத்திட்டங்களில் திருப்தியை வெளிப்படுத்துகிறார்கள், 24.9% பேர் மகிழ்ச்சி இல்லை என கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in