கள்ள ஓட்டு போட்டதாக கம்யூனிஸ்ட் தலைவர் மீது புகார்... வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

மூதாட்டியின் வாக்கை செலுத்தும் பூத் ஏஜென்ட் கணேசன்
மூதாட்டியின் வாக்கை செலுத்தும் பூத் ஏஜென்ட் கணேசன்

காசர்கோடு பகுதியில் 92 வயது மூதாட்டியின் வாக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூத் ஏஜென்ட் போட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல்
தேர்தல்

இந்த தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இப்படி வீட்டில் பதிவு செய்யப்பட்ட மூதாட்டியின் வாக்கை போலியாக வேறு ஒருவர் போட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட கல்யாச்சேரியில் தேவி என்ற 92 வயதான மூதாட்டி பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் கிளைச்செயலாளரும், பூத் ஏஜென்ட்டுமான கணேசன் வாக்களித்ததாக புகார் எழுந்தது. தேவியின் வீட்டில் நேற்று வாக்களிக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அருண் கே.விஜயன் உத்தரவின் பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரி, சிறப்பு வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி உதவி நுண் பார்வையாளர், சிறப்பு காவல் அலுவலர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மூதாட்டியின் வாக்கை செலுத்தும் பூத் ஏஜென்ட் கணேசன்
மூதாட்டியின் வாக்கை செலுத்தும் பூத் ஏஜென்ட் கணேசன்

92 வயதான தேவியின் ஜனநாயக உரிமையை எளிதாக்கும் வகையில் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்களிப்பதில் குறுக்கிட்டதாக கணேசன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in