தேர்தல் 2024 I மக்களவை வருகைப் பதிவில் சென்டம் அடித்த நண்பர்கள்

மக்களவை கூட்டம்
மக்களவை கூட்டம்

முடிவுக்கு வரும் 17-வது மக்களவையில் 100 சதவீதம் வருகைப் பதிவோடு, பாஜகவை சேர்ந்த 2 எம்பி-க்கள் சாதனை படைத்துள்ளனர்.

சட்டப்பேரவையோ, மக்களவையோ மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய வேண்டுமென, அவர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். தொகுதி மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் உட்பட நாட்டுக்கு நலம் பயக்கும் கேள்விகளையும் அந்த மக்கள் பிரதிநிகள் எழுப்ப வேண்டும் எனவும் வாக்காளர்கள் விரும்புகின்றனர். தங்களது எம்எல்ஏ அல்லது எம்பி-க்கள் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்றும் வாக்களித்தவர்கள் விரும்புகின்றனர்.

பாஜக எம்பிக்கள்; மோகன் மாண்டவி - பகீரத் சவுத்ரி
பாஜக எம்பிக்கள்; மோகன் மாண்டவி - பகீரத் சவுத்ரி

இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக மக்களவை அமர்வுகளை தவிர்க்காது அவற்றில் பங்கேற்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மக்களவை எம்பி-க்கள் அலட்சியமாக அநேக அமர்வுகளை தவிர்ப்பதும், அப்படியே பங்கேற்றாலும் முக்கிய விவாதம் எதிலும் பங்கேற்காது வாளாவிருப்பதுமே தொடர்கிறது. இந்த வகையில் பாஜகவை சேர்ந்த 2 எம்பிக்கள் மக்களவை வருகையில் 100 சதவீதம் பங்கேற்று இருக்கின்றனர்.

மக்களவையின் எந்தவொரு அமர்வையும் தவிர்க்காது இந்த இருவரும் தங்கள் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்த மோகன் மாண்டவி மற்றும் பகீரத் சவுத்ரி ஆகியோர், இவ்வாறு 100 சதவீதம் வருகையில் சாதனை படைத்துள்ளனர். இந்த பாஜக எம்பிக்கள் இருவருமே முதல் முறை எம்பியாக தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, இந்த இருவருக்குமான அமருமிடம் தற்செயலாய் அருகருகே அமைந்தது இன்னொரு சுவாரசியம்! கொரோனா பரவல் முழுவதுமாக விடுபடாத காலக்கட்டத்தில், மக்களவையின் அநேக இருக்கை வரிசைகள் காற்று வாங்கியபோது, இந்த 2 எம்பிக்களும் முகக்கவசம் அணிந்து சிரத்தையுடன் பங்கேற்று இருந்தனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த இருவரில் மோகன் மாண்டவி என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தின், பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் காங்கர் தொகுதியை சேர்ந்தவர். பகீரத் சௌத்ரி என்பவர் ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவருமே முதல்முறை எம்பி-க்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களவை வருகைப் பதிவில் சென்டம் அடித்த மகிழ்வில் இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!

அமைதியாக இருப்பது பலவீனம் இல்லை... நடிகை வரலட்சுமி ஆவேசம்!

புடவை கட்டி பீர் பாட்டிலை தலையில் வைத்து குத்தாட்டம் போட்ட மூதாட்டி... வைரலாகும் வீடியோ!

கோபி மஞ்சூரியனை தடைசெய்ய முடியாது... காரணம் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in