தொழிலதிபரிடம் 2,00,00,000 ரூபாய் மோசடி...அமைச்சர் உதவியாளர் என ஏமாற்றிய கும்பல்!

பணம்
பணம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சரின் உதவியாளர் என்று கூறி தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி
மோசடி

மகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையில் உள்ள தாதரைச் சேர்ந்தவர் எரிக் அன்க்லாசாரியா. தொழிலபதிரான இவர், மாடுங்கா காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், டர்பே காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு ஒரு வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், 2021 செப்டம்பர் மாதம் அலி ராசா என்பவரை இந்த வழக்கு தொடர்பாக உதவி கோரினேன். அப்போது அவர் ஜெய் ராஜூ மங்லானி என்பவர் செல்வாக்கு மிக்கவர் மூலம், வழக்கை ரத்து செய்யலாம் என அலி கூறியுள்ளார். இதை நானும் நம்பினேன்.

இதையடுத்து வால்மீகி என்பவரிடம் மங்லானி என்னை அழைத்துச் சென்றார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சருக்கு மிக நெருக்கமானவர் என்று மங்கலானி கூறினார். அத்துடன் உதவியாளர் என்றும் கூறினார். அப்போது மதுபான உரிமம் எடுத்து தருவதாக வால்மீகி கூறினார். அத்துடன் வழக்கை ரத்து செய்ய முதலில் 2 லட்ச ரூபாயைக் கொண்டு வரச்சொன்னார். ஆனால், ஆவணங்களைப் பார்த்தபின் 37 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பணம்
பணம்

அதற்கானத் தொகைக்கு காசோலையை வழங்கினேன். அமைச்சரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக வால்மீகி, அலி கூறியதுடன் மந்திராலயத்திற்கு அழைத்துச் சென்றனர். வழக்கை ரத்து செய்ய இன்னும் 47 லட்சம் செலவழிக்க வேண்டும் என்று கூறிய ஒருவரை அங்கு ஒருவரை சந்திக்க வைத்தனர். அந்த நபரை நம்பி பணத்தைக் கொடுத்தேன். இதன் பின்னர், என்னிடமிருந்து மேலும் 60 லட்ச ரூபாயை மிரட்டி பறித்தனர் ஆனால், என் மீதான வழக்கு ரத்து செய்யப்படவில்லை.

ஆனால், 1.98 கோடியை என்னிடமிருந்து பறித்தனர். பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இனி பணத்தைப் பற்றி கேட்கக்கூடாது என்று எச்சரித்தார்.

இதன் பின் விசாரித்த போது ம்ந்திராலயத்தில் நான் சந்தித்தவருக்கும், அமைச்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்தது. அத்துடன் அவர் மந்த்ராலயா ஊழியரும் இல்லை என்று தெரிந்தது. எனவே என்னிடம் பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளார்.

இதையத்து மாடுங்கா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பெயரைப்பயன்படுத்தி 1.98 கோடி ரூபாய் மோசடி செய்தது அலி ராசா ஷேக், ஜெய் ராஜு மங்லானி, வால்மீகி கோல்ஹர், விஜய் நாடார் மற்றும் விக்ராந்த் சோனாவானே என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் அனைவர் மீதும் மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல வேறு யாரிடமும் இவர்கள் பணமோசடி செய்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருவதுடன் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வழக்கை வாபஸ் பெற்றுத்தருவதாக அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி 1.98 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தாதரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in