நாளை வாக்குப் பதிவு... நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1.48 லட்சம் பேர் பயணம்!

நாளை வாக்குப் பதிவு... நேற்று மட்டும் சென்னையில் இருந்து 1.48 லட்சம் பேர் பயணம்!

மக்களவைத் தேர்தலில்  வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 மக்களவைத் தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் நாளைய தினம் மூடப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் 100% வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.

விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று தொடங்கி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்  10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து நேற்றும், இன்றும்  வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன்  2,970 சிறப்புப் பேருந்துகளுமாக  சேர்த்து இரண்டு நாட்களுக்கு மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று  தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 807 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை, இவற்றில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இதேபோன்று, சென்னையில் இருந்து இன்று  தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய 46,503 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in