
மதுரையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புகொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்தும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பதை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் கருப்பு பலூன் பறக்கவிட்டும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளுநருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!