பாம்பை அடித்துக் கொன்று வீடியோ பதிவேற்றம்; வித்தை காட்டிய யூடியூபர் கைது!

யூடியூபர் செந்தில்குமார்
யூடியூபர் செந்தில்குமார்

புதுக்கோட்டை அருகே கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றிய யூடியூபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மலையாண்டி நகரை சேர்ந்தவர் மெய்ஞான செந்தில்குமார்(28). இவர் சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராமில் 'ரொம்ப பெருமையா இருக்கு' என்ற பெயரில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு யூடூபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மே 30ம் தேதி இரவு பாம்பு ஒன்று அவரது ஊருக்குள் நுழைந்ததையடுத்து அந்தப் பாம்பை கட்டையால் அடித்து கொன்று அந்த பாம்பு கட்டுவிரியன் பாம்பு என்று கூறி வீடியோ எடுத்து அவரின் சேனலின் பதிவேற்றம் செய்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கீரனூர் சரக வனத்துறையினர், மெய்ஞான செந்தில்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பாம்பை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், அந்தப் பாம்பு விஷமில்லாத தண்ணீர் பாம்பு என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பாம்பை அடித்துக் கொன்று வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக, வனத்துறையின் வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமாரை கைது செய்யப்பட்டார்.

பின்னர், விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மெய்ஞான செந்தில்குமாரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in