நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

விபத்துக்குள்ளான கார்.
விபத்துக்குள்ளான கார்.

செகந்திராபாத்தில் அதிவேகமாக வந்த கார் சிக்னலை தாண்டி மற்றொரு கார் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து விதிகளை மீறுவதால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஓட்டுநர் சிக்னலைத் தாண்டியதும், கார் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இந்த காட்சி சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஜூப்ளி பேருந்து நிலையம் அருகே கருப்பு நிற எஸ்யூவி கார் அதிவேகமாக சிக்னலை தாண்டி கட்டுப்பாட்டை இழந்தது. அத்துடன் அருகில் இருந்த வெள்ளை நிற கார் மீது மோதியது. இதில் கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சிக்னல் தாண்டுதல் மற்றும் அதிவேகத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக் காட்டுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களோடு உயிர் தப்பியுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு போக்குவரத்து காவலர் விரைந்து வருவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரை சமூக ஊடகத்தில் பலர் விமர்சித்துள்ளனர்.

இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். அதிவேகமாகச் செல்வது, சாலை விதிகளை மீறுவது வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் செல்லும் பிற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கும் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in