நீங்கள் பிரதமர் ஆவீர்களா? - செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தங்களுக்கு எதிரியே இல்லை என்ற பிம்பத்தை பாஜக கட்டமைத்தாது. ஆனால் இப்போது ஆட்சியமைக்கும் அளவுக்கான தனிப் பெரும்பான்மையைகூட பாஜகவால் பெறமுடியவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதேபோல தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கடந்த முறை 39 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெற்ற நிலையில், இப்போது 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளோம். இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தி

அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். ஆனால், 400 இடங்கள் வெற்றிபெறுவோம் என்று சொல்லி, தங்களுக்கு யாருமே எதிரியே இல்லை என்ற பிம்பத்தை கட்டமைத்தார்கள். ஆனால் இப்போது ஆட்சியமைக்கும் அளவுக்கான தனிப் பெரும்பான்மையைகூட பாஜகவால் பெறமுடியவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ள இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.

இரு நாட்களுக்கு முன்புகூட கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் தாக்குதலை பாஜக தொடுத்தது. பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பலம் என எல்லாவற்றையும் உடைத்து மகத்தான வெற்றிபெற்றுள்ளோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக முன்னெடுக்கும்” என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அப்போது இந்தியா கூட்டணியின் சார்பில் நீங்கள் பிரதமர் வேட்பாளர் ஆவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ இதற்கு முன்பே பலமுறை பதில் சொல்லியுள்ளேன். தலைவர் கலைஞர் சொன்னதுபோல எனது உயரம் எனக்குத் தெரியும்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in