அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

அண்ணாமலை
அண்ணாமலை

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கோவை, நீலகிரி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், திருச்சி மற்றும் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களும் முன்னிலை பெற்றுள்ளனர். கோவையில் அண்ணாமலை தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தபால் வாக்குகளை பிரித்து அவற்றை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முதல் கட்ட தகவலின்படி, கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 78 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணும் பணி
வாக்கு எண்ணும் பணி

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ,ராசா முன்னிலை வகித்து வருகிறார். திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். இதேபோல் மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்றுள்ளார். தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.

தபால் வாக்குகள்
தபால் வாக்குகள்

கோவை தொகுதியில் அண்ணாமலை தபால் வாக்குகளில் 26 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 12 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜேஷ், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in