ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

ராகுல் காந்தி - சசி தரூர் - ராஜீவ் சந்திரசேகர்
ராகுல் காந்தி - சசி தரூர் - ராஜீவ் சந்திரசேகர்

மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கான மாற்றுவேலை உபாயங்களை பாஜகவினர் கிண்டலுடன் பரிந்துரை செய்து வருகின்றனர்.

நடப்பு மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன. பாஜகவினரை பொறுத்தளவில் அது அவர்கள் அதிகம் எதிர்பார்த்தவை என்பதால், பெருமிதத்தில் திளைத்து வருகின்றனர். தொடர்ந்து 3வது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமைவதில், இதுவரை தங்களை அச்சுறுத்த முயன்ற எதிர்க்கட்சிகளை பகடி செய்தும் வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தளவில், இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை அடியோடு நிரகரித்துள்ளனர். பாஜகவின் வெற்றிக்கு மாற்றாக இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால் அந்த குரல்கள் ஒருமித்தோ, உற்சாகமோ இன்றி சுணங்கியுள்ளன. காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கான வெற்றிக்கணக்கிலும், தணிந்த குரலையே பதிவு செய்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று கிண்டலாக கருத்து பதிந்துள்ளார். திருவனந்தபுரத்தில் அவர் இன்று அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி உடற்பயிற்சி கூடம் தொடங்க வேண்டும். சசி தரூர் ஆங்கில பயிற்சி நிறுவனம் தொடங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மொழியறிவும், திறமையாகவும் பேசக்கூடிய பலர் உள்ளனர், இந்தத் தேர்தல்கள் அவர்களை ஒரு புதிய திசையை நோக்கிச் செலுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என பகடி செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு இனி அரசியலில் இடமில்லை என்பதை வேறு மொழியில் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த சசி தரூர் ‘அவை நகைப்புக்கு இடமானவை’ என்று கூறியிருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையிலும் ராஜீவ் சந்திரசேகரின் இந்த பதில் அமைந்துள்ளது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

இதற்கிடையே கருத்துக்கணிப்பு முடிவுகளை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக சாடி உள்ளனர். "நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கருத்துகணிப்புகள் காட்டுவதற்கு முற்றிலும் நேர்மாறாக எங்கள் முடிவுகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறினார். ராகுல் காந்தியும் "இது கருத்துக் கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. இது மோடியின் கற்பனையான கணிப்பு" என்று கூறியிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in