கதறும் பயணிகள்... அடுத்தடுத்து விமானங்கள் ரத்து... தொடர் காலதாமதம்... சிக்கலில் விஸ்தாரா... சாட்டையை சுழற்றும் அமைச்சகம்!

கதறும் பயணிகள்... அடுத்தடுத்து விமானங்கள் ரத்து... தொடர் காலதாமதம்...  சிக்கலில் விஸ்தாரா... சாட்டையை சுழற்றும் அமைச்சகம்!

அடுத்தடுத்து விமானங்களை திடீரென ரத்து செய்வது, குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்காதது என்று விஸ்தாரா விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.

நம்ம ஊரு டவுன் பஸ் கணக்காக விமானத்தின் இருக்கைகள் முழுவதும் நிரம்பிய பிறகே புறப்படும் என்கிற கேலிக்கூத்தெல்லாம் கூட நடந்து வருவதாக பயணம் செய்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழ, விமான போக்குவரத்து அமைச்சகம் விஸ்தாராவிடம் இருந்து தொடர் ரத்து மற்றும் அடிக்கடி நேரும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட விமானங்களை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி, திடீரென ரத்து செய்துள்ளது விஸ்தாரா. சில வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் பயணத்தை திட்டமிட்டு, முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், இப்படி திடீரென ரத்து செய்வதால், கடைசி நேரத்தில் பிற விமானங்களிலும் டிக்கெட் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். கடைசி நேர பரபரப்பு அவர்களது மொத்த பயண திட்டத்தையும் உருக்குலைத்து போட்டு மன உளைச்சலடைய செய்கிறது. ஒரே நாளில் சென்று திரும்ப விமான பயணத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள், இந்த தொடர் தாமதங்களினால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை சமர்பிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது.

"போதிய பணியாளர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில், டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இருந்து விஸ்தாராவின் விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன, முக்கியமாக விமானிகள் கிடைக்காததால். விஸ்தாரா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்ட பிறகு ஏர் இந்தியாவுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பல பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளையும், தங்களுக்கு நேர்ந்த அசெளகர்யங்களையும் வெளிப்படுத்த துவங்கினர். பலர் இது குறித்து விமான நிலைய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும், போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கும் புகார்களாக தெரியப்படுத்தினர்.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க அதிக அக்கறையுடன் உழைக்கிறோம். எங்கள் நெட்வொர்க் முழுவதும் போதுமான இணைப்பை உறுதி செய்வதற்காக, நாங்கள் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என்று விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "பயணிகளின் அசெளகர்யங்களைக் குறைக்க நாங்கள் மாற்று விமான தேர்வுகளையோ அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பொருந்தும் வகையில் பணத்தைத் திரும்ப அளிக்கிறோம். இந்த இடையூறுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நிலைமையை சீராக்க நாங்கள் கவனத்துடன் பணியாற்றி வருகிறோம், விரைவில் எங்கள் வழக்கமான திறனை மீண்டும் தொடங்குவோம்" என்றார்.

இதற்கிடையில், நீண்ட பணி நேரம் மற்றும் குறைந்த பறக்கும் தூரம் ஆகிய காரணங்களால் விமானிகள், திடீரென விமானத்தை இயக்க மறுத்ததால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக விமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...    


அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in