விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி... அதிமுகவுக்கு 4வது இடம்!

தாரகை கத்பட்
தாரகை கத்பட்

விளவங்கோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை சுமார் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவி வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 19ம் தேதி விளவங்கோடு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

திமுக, காங்கிரஸ்
திமுக, காங்கிரஸ்

இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பட், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் தாரகை முன்னணி வகித்து வந்தார்.

இந்நிலையில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் இரண்டாம் இடத்தை பாரதிய ஜனதா கட்சியும், மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பெற்றது. அதிமுகவிற்கு இந்த தொகுதியில் நான்காவது இடமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in