தீபாவளி ரேஸில் முந்தும் அஜித், சூர்யா... அட சூரியும் லிஸ்ட்ல இருக்காரு!

கங்குவா
கங்குவா

இந்த வருடம் தீபாவளி வெளியீடாக ’விடாமுயற்சி’, ‘கங்குவா’ ரிலீஸாக உள்ள நிலையில், ரேஸில் அஜித், சூர்யாவுடன் சூரியின் ‘விடுதலை 2’ படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது. இந்த மாத இறுதியில் பான் வேர்ல்ட் படமாக நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படம் வெளியாகவுள்ளது.

’புஷ்பா2’
’புஷ்பா2’

இதற்கடுத்து, ஜூலை மாதம் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’, தனுஷின் ‘ராயன்’, ஆகஸ்ட் மாதம் ‘புஷ்பா2’, செப்டம்பர் மாதம் விஜயின் ‘GOAT' மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, அக்டோபர் முதல் வாரத்தில் ரஜினியின் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் பெரிய படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாக படப்பிடிப்பு முடிந்திருக்கும் சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் சூரியின் ‘விடுதலை2’ ஆகிய படங்கள் எப்போது ரிலீஸ் என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

விடுதலை திரைப்படத்தில் சூரி
விடுதலை திரைப்படத்தில் சூரி

இப்போது இந்த மூன்று படங்களும் இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதில் ‘கங்குவா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல, ‘விடுதலை2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் சீக்கிரம் தொடங்க இருக்கிறதாம்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in