தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,520 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வந்தது. சற்று விலை இறங்கிய போதும், தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வந்தனர். நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,840 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 190 ரூபாய் குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,520 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள்

வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 100 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 4 ரூபாய் 50 பைசாக்கள் குறைந்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in