பெண் கிடைக்காத விரக்தி... எருமை மாட்டை திருமணம் செய்த இளைஞர்: வைரலாகும் வீடியோ!

பெண் கிடைக்காத விரக்தி... எருமை மாட்டை திருமணம் செய்த இளைஞர்: வைரலாகும் வீடியோ!

திருமணம் செய்ய பெண் கிடைக்காத இளைஞர் ஒருவர், எருமை மாட்டைத் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் திருமண உறவுகளால் ஏற்படும் குடும்ப உறவு முறை உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், இந்தியாவைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அப்படி நடக்கும் திருமணங்கள் அந்தந்த மாநில கலாச்சார சடங்குகளுடன் நடத்தப்படுகிறது. அப்படி நடைபெறும் வீடியோக்களை சமூக ஊடங்களில் பலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.

திருமணம்
திருமணம்

ஆனால், திருமணமாகாத பலரும் தங்களுக்குப் பெண் கிடைக்கவில்லை என்று வேடிக்கையான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அப்படியொரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என ஒரு இளைஞர், எருமை மாட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் சிரித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் Monisingh9090 என்பவரில் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு இளைஞன் எருமை மாட்டை திருமணம் செய்து கொள்கிறார். முதலில் எருமைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது கழுத்தில் மாலை அணிவித்துக் கொள்கிறார். எருமையின் நெற்றியில் பொட்டு வைக்கிறார். இதன் பின் எருமையன் முதுகில் துணியை போட்டு மூடுகிறார்கள். இதன் பின் ஒரு பெண், அந்த மணமகனையும், எருமையையும் ஆரத்தி எடுக்கிறார். இதன்பின் அந்த எருமை மாட்டின் மீது மணமகன் தாவி ஏறி சவாரி செய்ய முயற்சிக்கிறார்.

ஆனால், அவரை தூக்கிப்போட்டு விட்டு அந்த மாடு ஓட்டம் பிடித்து விடுகிறது. இதனால் கீழே விழுந்த மணமகன் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in