தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

வெற்றிக்கான சான்றிதழைப் பெற்ற கனிமொழி
வெற்றிக்கான சான்றிதழைப் பெற்ற கனிமொழி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட் தொகையையும் இழக்கச் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

இதில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன., நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது.

இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர்.

கனிமொழி
கனிமொழி

இதில் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர். கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை தோற்கடித்தார்.

மேலும் 1,22,380 வாக்குகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் மூன்றாவது இடத்தையும் 1,20,300 வாக்குகள் பெற்று நாதக ரௌனா ரூத் ஜெனி நான்காவது இடத்தையும் பிடித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in