முதலில் ராணுவ சேவை புரியட்டும்; பின்னர் அக்னிவீரர் திட்டம் குறித்து விமர்சிக்கட்டும்... ராகுல் காந்திக்கு வி.கே.சிங் சவால்

எல்லையில் ராணுவ வீரர்
எல்லையில் ராணுவ வீரர்
Updated on
2 min read

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் முதல் பணியாக அக்னி வீரர் திட்டம் குப்பைத்தொட்டிக்கு போகும் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு, ’முதலில் அவர் ராணுவத்தில் சேர்ந்து சேவை புரிந்த பின்னர் இம்மாதிரி கருத்து தெரிவிக்கட்டும்’ என வி.கே.சிங் சவால் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ‘அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு, மத்திய அமைச்சரும் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங் இன்றைய தினம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்
மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

“ராகுல் காந்திக்கு நான் அறிவுரை கூற விரும்புகிறேன். அவர் முதலில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றட்டும். அதன் பின்னர் அக்னிவீரர் திட்டம் குறித்து எந்த கருத்தையும் வெளியிடட்டும். ராணுவத்தைப் பற்றி எதுவும் தெரியாது அவர் கருத்து கூறுவது சரியல்ல” என்று வி.கே.சிங் இன்று தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 2022-ல் மூன்று சேவைகளின் வயதைக் குறைக்கும் நோக்கத்துடன், ஆயுதப் படைகளின் குறுகிய கால சேர்க்கைக்காக அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை நான்காண்டு காலத்திற்கு பணியமர்த்துவதுடன், அவர்களில் 25 சதவீதத்தை 15 ஆண்டுகளுக்கு தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்திரவாதம் அளித்தது.

ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னி வீரர் திட்டம் கைவிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இதனிடையே மே 22 அன்று ஹரியாணாவின் மகேந்திரகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ’மத்திய அரசு இந்திய வீரர்களை தொழிலாளர்களாக மாற்றுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

அக்னிபத் ஆள் சேர்ப்பு
அக்னிபத் ஆள் சேர்ப்பு

"ராணுவத்தில் சேவையாற்ற விரும்புவோரின் இதயம், இரத்தம் மற்றும் டிஎன்ஏவில் தேசபக்தி உள்ளது. மோடி முதன்முறையாக, இந்திய வீரர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கிறார். ஒருவர் சாதாரண ஜவான்; மற்றொருவர் அதே ராணுவத்தின் அதிகாரி. அதிகாரியின் குடும்பம் ஓய்வூதியம் உட்பட அனைத்து வசதிகளையும் பெறும்.

அக்னிவீரர் திட்டத்தில் சேரும் ஒரு ஏழைக் குடும்பத்தின் மகனுக்கு, ஓய்வூதியம் மட்டுமல்ல, தியாகிக்கான அங்கீகாரமும் கிடையாது. இந்தியா கூட்டணியின் அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்ததும், இந்த அக்னிவீரர் திட்டம் குப்பைத் தொட்டிக்கு செல்லும்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in