விளையாட்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு பிளக்ஸ்... கொதித்து போட்டியை நிறுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

அரசு விழாவில் விஜயபாஸ்கர் பிளக்ஸ் போர்டு
அரசு விழாவில் விஜயபாஸ்கர் பிளக்ஸ் போர்டு

திருச்சியில் திமுக ஆட்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்ததால், அமைச்சர் நேரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துக் கொண்டார். இந்த விவகாரத்தால் போட்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து நிதி வசூல் செய்து போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உருவம் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் அண்ணா விளையாட்டு அரங்கின் சாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

விளையாட்டு போட்டிகள்
விளையாட்டு போட்டிகள்

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரின் பிளக்ஸ் போர்டுகளை வைத்தது யார் என கோபமாக கேட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர். இந்த விவகாரத்தால், சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் சாலையில் தலைக்குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் சில இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டன. பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் பிளக்ஸ் போர்டு
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் பிளக்ஸ் போர்டு

திமுக ஆட்சி காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு வைத்து விவகாரம் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக திமுக அமைச்சர்கள் யாருடைய ப்ளக்ஸ் போடும் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ப்ளக்ஸ் போர்டு வைத்தது யார் என்று திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in