பெண்களுக்கு மட்டுமே கருணை வேலை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது... உயர் நீதிமன்றம் கருத்து!

பெண்களுக்கு மட்டுமே கருணை வேலை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது... உயர் நீதிமன்றம் கருத்து!

"கருணை அடிப்படையில் பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது" என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேலூரை சேர்ந்த அருணகிரி வேலூர் மாவட்ட ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த தனது தந்தை ராமலிங்கம் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். அந்த மனு 2015-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இதையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கருணை அடிப்படையில் அருணகிரிக்கு வேலை வழங்க வேண்டும் என 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தந்தை உயிரிழந்து 15 ஆண்டுகளுக்கு பின் கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறை அரசாணையின் படி பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என்றும் சொல்லி அருணகிரிக்கு வேலை மறுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கருணை அடிப்படையில் அருணகிரிக்கு வேலை வழங்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி என். சதீஷ்குமார், ”பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in