கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை... பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை... பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!

கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களை விட இந்தாண்டு கோடை வெப்பம் கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தினசரி பதிவாகும் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இன்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கும் நிலையில், வெயிலின் தாக்கம் மேலும் உக்கிரமாக இருக்கும். இப்படி கோடை காலத்தின் வெப்பம் வாட்டி வதைக்கும் நேரத்தில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பள்ளி வகுப்பு
பள்ளி வகுப்பு

இதுதொடர்பாக பள்ளிக் கல்விதுறை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைந்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், வெயில் அதிகமாக இருப்பதால் தனி வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவியர் மயக்கமடைவதாகவும் தொலைபேசி மூலம் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக, அந்தந்த கல்வி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in