காங்கிரஸுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் திமுகவுடையதுதான்... தமிழிசை விளாசல்!

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

"பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் பாமகவின் ஓட்டுகள் என்று காங்கிரஸ் கூறுமாயின், காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவுடைய ஓட்டுகள் என்றுதான் நாங்கள் கூறுவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும்" என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பதவியேற்பு விழா, டெல்லியில் நடக்க உள்ளது. இதையடுத்து டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் பாமக ஓட்டுகள் என காங்கிரஸ் கூறுமாயின் காங்கிரஸுக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவுடைய ஓட்டுகள்தான். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றிருந்தால் டெபாசிட் இழந்திருக்கும். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லையே என்பதை விட காங்கிரஸுக்கு திமுகவுக்கும் இடம் கிடைத்தும் பலன் இல்லை என்பதுதான் கவலை.

மோடி திரவுபதி முர்மு
மோடி திரவுபதி முர்மு

மக்களவைத் தேர்தலில் தோற்றாலும், பாஜகவினர் தமிழக மக்களுக்காக போராடி எல்லா பணிகளையும் செய்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை, பிரதமர் மோடி ஆளப்போகிறார் என்பதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. டெல்லியில் அத்தனை பெரிய கூட்டத்தில் தமிழகத்தை பற்றி பேசி தமிழ்நாட்டை மோடி அங்கீகரித்துள்ளார்.

டெல்லிக்கு மிகவும் மகிழ்ச்சியோடு செல்கிறேன். அரசியல் வாழ்க்கையில் எந்த பதவியையும் எதிர்பார்த்து சென்றதில்லை. கட்சி எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பேன். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் எனது கருத்தை வலுவாக கூறுவேன்" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in