காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவரானார் சோனியா காந்தி: ராகுலுக்கு முக்கிய பதவி?

சோனியா கார்கே
சோனியா கார்கே

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சோனியா காந்தி இப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராகியுள்ள நிலையில், ராகுல் காந்தி மிக முக்கிய பதவியான ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாவார் என சொல்லப்படுகிறது.

இந்த முறை சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை, அதற்கு முன்னதாகவே அவர் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராகுல் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in