பிரஜ்வல் ரேவண்ணாவின் காதலிக்கு எஸ்ஐடி நோட்டீஸ்... விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோ, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு உதவி செய்ததுடன், அடைக்கலம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற அவரது காதலிக்கு சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33) மக்களவைத் தேர்தலில் ஹசன் தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில் பிரஜ்வல் சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாகவும் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரஜ்வல் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐ) விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபபட்டார். அவரை ஜூன் 10-ம் தேதி வரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் விசாரணை நடத்த எஸ்ஐடி அதிகாரிகள் பிரஜ்வல் ரேவண்ணாவை ஹோலேநரசீபூரில் உள்ள சென்னாம்பிகா வீட்டுக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணாவிடம் நான்கு நேரமாக எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் பின் விசாரணைக்கு அழைக்கும் போது மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அவரிடம் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க உதவியதாக அவரது காதலிக்கு எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ள, அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரஜ்வலுக்கு பண உதவி, தங்குமிடம் கொடுத்தற்கான முக்கிய ஆதாரம் கிடைத்ததால் இந்த நோட்டீஸ் அவரது காதலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்ஐடி கூறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in