வெற்றி நடைபோடும் இந்தியா கூட்டணி... மக்களவையை கலக்க போகும் தமிழக 5 பெண் எம்.பிக்கள்!

ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்
ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழ்நாட்டில் இருந்து மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 5 பெண் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட 40 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
டாக்டர் ராணி ஸ்ரீகுமார்

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 1 லட்சத்து 66 ஆயிரத்து 8 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிட்ட தங்கவேல் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 1 லட்சத்து 96 ஆயிரத்து 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்துள்ளார்.

இதேபோல் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுதா 2 லட்சத்து 71 ஆயிரத்து 183 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் . இவர் அதிமுகவின் பாபுவை தோல்வியடைய செய்துள்ளார் .

சுதா
சுதா

தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 25 ஆயிரத்து 945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தமிழகத்தின் 5 எம்.பிக்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in