‘மோடி பிராண்ட்’ காலம் முடிந்து விட்டது... கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் விழலாம் - சஞ்சய் ராவத் சரமாரி தாக்குதல்!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என இரு தூண்களை நம்பி உருவாகும் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் தகர்ந்து விழலாம் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை முன்வைத்து மோடி மற்றும் பாஜக ஆட்சியை இன்றைய தினம் சஞ்சய் ராவத் கடுமையாக தாக்கியுள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

”மோடி பிராண்ட் என்பதன் காலம் முடிந்து விட்டது. மோடிக்கான மரியாதையும் காலாவதியாகி விட்டது. மோடியை பிரதமராக கொண்ட ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். மேலும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு என பலவீனமான இரு தூண்களை நம்பி எழுப்பப்படும் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் விழலாம்” எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கூடவே காங்கிரஸ் கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருக்கு தூண்டிலிடவும் சஞ்சய் ராவத் மறுக்கவில்லை. “இந்த இருவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் சர்வாதிகாரத்தை ஆதரிப்பார்கள் என நான் நம்பவில்லை. எனவே அவர்களை ஏற்றுக்கொள்ளவும் இந்தியா கூட்டணி தயாராக இருக்கும்” எனவும் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

ஆனால் சஞ்சய் ராவத்தின் கணிப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் பாஜக தலைமையிலான தேஜகூ கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கூட்டணி அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளனர். பாஜக தரப்பும் இந்த இரு தலைவர்களின் நிபந்தனைகளுக்கு காது கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை வென்றது. இது கடந்த 2019 தேர்தலில் வென்ற 303 இடங்களை விட கணிசமான எண்ணிக்கையில் குறைவாகும். மாறாக காங்கிரஸ் கட்சி 99 இடங்களை வென்று இம்முறை வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in