மகள் பெயரை டாட்டூவாக்கிய ரன்பீர் கபூர்... வைரல் புகைப்படம்!

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் தன் மகள் பெயரை டாட்டூவாக பதிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர்- அலியா பட். இவர்களின் குழந்தை ராஹா கபூருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குழந்தை பிறந்ததும் சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்தார் ரன்பீர் கபூர். ராஹா மீது அதீத அன்பு வைத்திருக்கும் ரன்பீர் தனது மகளின் பெயரை தோள்பட்டையில் டாட்டூ குத்தியிருக்கிறார்.

மும்பையில் அலியா- ரன்பீர் கட்டி வரும் சொகுசு பங்களாவை ராஹா பெயரில் பதிவு செய்யப் போவதாகவும் இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார் என்ற செய்திகளும் சமீபத்தில் இணையத்தை ஆக்கிரமித்து இருந்தது.

மகளுடன் ரன்பீர் கபூர்...
மகளுடன் ரன்பீர் கபூர்...

இந்த பங்களாவின் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 250 கோடி என்கின்றனர். ராமாயணம் கதையை தற்போது படமாக்கி வருகின்றனர். இதில் ரன்பீர் தான் ராமனாக நடிக்கிறார். அலியாவும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in