இது மோடிக்கு மிகப்பெரிய செய்தி; எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் மக்களின் தீர்ப்பு - ராகுல் காந்தி உற்சாகம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம் இது. மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவியிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராகுல் கார்கே சோனியா
ராகுல் கார்கே சோனியா

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம் இது. பாஜக மட்டுமல்ல. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்திய ஏஜென்சிகளை மிரட்டுகின்றனர். நாங்கள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, மத்திய ஏஜென்சிகள், நாட்டின் நிர்வாக அமைப்பு, சிபிஐ மற்றும் இடிஐ, நீதித்துறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினோம். ஏனெனில் இந்த நிறுவனங்கள் அனைத்தையும் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி கைப்பற்றிவிட்டனர்.

இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய விஷயத்தை நாடு தெளிவாகவும் ஒருமனதாகவும் கூறியுள்ளது. ‘நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இந்த நாட்டை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை, அவர்கள் நடத்தும் முறை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அரசியல் சாசனத்தைத் தாக்கிய விதத்தை நாங்கள் விரும்பவில்லை’ என கூறியுள்ளனர். இது நரேந்திர மோடிக்கு ஒரு பெரிய செய்தி” என்று கூறினார்

மோடி - அமித் ஷா - ராகுல் காந்தி
மோடி - அமித் ஷா - ராகுல் காந்தி

தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மக்களின் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காக்க உதவும்

இந்தியாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடிய அனைவருக்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாட்டின் மிகவும் பின்தங்கிய குடிமக்கள் அரசியலமைப்பைக் காப்பாற்ற பெரும்பான்மை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பாஜக மக்களை மதிப்பதில்லை, மக்களிடம் சரியாக பேசுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in