காஞ்சிபுரம் அருகே அதிர்ச்சி: கர்ப்பிணியைக் கொன்று நிர்வாண நிலையில் கால்வாயில் வீசிய கொடூரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கர்ப்பிணி கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கர்ப்பிணி கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் கர்ப்பிணியின் சடலம் கால்வாயில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தைச் சேந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி தேவி (32), ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தேவி, சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பகுதியில் எம்பிராய்டிங் வேலைக்குச் சென்று வந்தார்.

சுங்குவார்சத்திரம் காவல் நிலையம்
சுங்குவார்சத்திரம் காவல் நிலையம்

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற தேவி அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர்.

இந்நிலையில் தனது மனைவியை காணாதது குறித்து, முருகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீர் கால்வாய் சிலாப்புக்கு அடியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கால்வாய் சிலாப்பை கடப்பாறை மூலம் அகற்றி சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட தேவி
கொலை செய்யப்பட்ட தேவி

இதில் சடலமாக மீட்கப்பட்டது தேவி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தேவியை கொலை செய்தவர்கள் யார், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in