பாலியல் புகாருக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை... கர்நாடகா தேர்தல் நிலவரம்!

எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா
எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோ மற்றும் பாலியல் புகாருக்குள்ளான மதச்சார்பற்ற ஜனதா தள ஹசன் தொகுதி எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா மக்களவைத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மக்களவைத் தேர்தலில் அவர் ஹசனில் அவர் பாஜக கூட்டணியோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் முடிந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா(33)‘ இவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியாயின.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இதுதொடர்பாக அவர் மீது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார்4 வழக்குகள் பதிவு செய்தனர். அவர் ஜெர்மனிக்குத் தப்பியோடிய நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர்கடந்த மாதம் 31-ம் தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். வரும் 6-ம்தேதி வரை போலீஸார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் புகாருக்கு உள்ளான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேலை விட்டு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

காலை 11 மணி நிலவரப்படி, ஷ்ரேயாஸ் படேலை விட 4,700 வாக்குகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் முன்னிலையில் உள்ளார். 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா 1.4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எச்.டி.குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

மக்களவைத் தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முறையே ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேஜஸ்வி சூர்யா, எச்.டி.குமாரசாமி ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், முன்னிலை வகிக்கின்றன

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in