அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி... தாசில்தார் என ஏமாற்றிய கார் டிரைவர் கைது!

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது
Updated on
2 min read

கோவையில், தன்னை தாசில்தார் எனக்கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த கார் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். கடந்த 7 ம் தேதி ஜேசுராஜா என்பவர் சக்திவேலுக்கு அறிமுகமாகி, மதுரையில் சிறப்பு தாசில்தாராக உள்ளதாகவும், அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன் பேரில் சக்திவேலின் மனைவிக்கு கோவை மாநகராட்சியில் பில் கலெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக 25 ஆயிரத்தை ஜேசுராஜா வாங்கியுள்ளார்.

தொடர்ந்து மீதி பணம் ரூ.2 லட்சத்தை பெற சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். ஜேசுராஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சக்திவேல், அடையாள அட்டையை கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட ஜேசுராஜா, சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி உள்ளார்.

வேலை மோசடி
வேலை மோசடி

இதுகுறித்து சக்திவேல் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று சாந்திமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது, காரில் வந்த ஜேசுராஜாவை பிடித்தனர்.

தொடர்ந்து ஜேசுராஜாவை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரித்தபோது, இவருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், நல்லமங்களம் என்றும், தற்போது சாந்திமேடு, லட்சுமிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், மதுரையில் தாசில்தாராக வேலை செய்வதாக பொய்யான தகவலை கூறி சக்திவேலுவிடம் ரூபாய் 25 ஆயிரத்தை ஏமாற்றியதையும் ஒப்புக் கொண்டார்.

ஜேசுராஜா
ஜேசுராஜா

இதே போல் 2023 ஆம் ஆண்டு ஜேசுராஜா வீட்டு அருகில் உள்ள முகிலன் என்பவரிடம் தாசில்தார் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் மற்றும் பிரேம்குமார் என்பவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் ஓஏ வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சமும் மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 25 ஆயிரம் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. அதனை அடுத்து ஜேசுராஜா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in