சவ ஊர்வலத்தில் தகராறு... அதிமுக பெண் பிரமுகரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி கைது!

அதிமுக பெண் பிரமுகர்
அதிமுக பெண் பிரமுகர்
Updated on
2 min read

சென்னையில் நடந்த சவ ஊர்வலத்தில் கஞ்சா போதையில் மாலையை தன் மீது வீசியதை தட்டி கேட்ட அதிமுக பெண் பிரமுகரின் கழுத்தில் கத்தியால் குத்திய ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி(60). இவர் அதிமுகவில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார். நேற்று இவரது வீட்டு அருகே வசித்து வந்த தட்சணாமூர்த்தி என்பவர் காலமானதால் அவரது இறுதி ஊர்வலம் மாலை நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் மது, கஞ்சா போதையில் இருந்ததால் சாலையில் மாலையை தூக்கி வீசியும், அவ்வழியாக சென்ற வாகனங்களை கைகளால் அடித்தும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இறுதி ஊர்வலத்தில் வந்த இளைஞர் மாலையை தூக்கி வீசிய‌ போது, அது அதிமுக பிரமுகர் ஆதிலட்சுமி மீது விழுந்தது.

ஆதிலட்சுமி வீடு
ஆதிலட்சுமி வீடு

இதுகுறித்து அந்த இளைஞரிடம், ஆதிலட்சுமி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆதிலட்சுமியின் முகம், கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆதிலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் ஆதிலட்சுமி மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரவுடி சரவணன்
ரவுடி சரவணன்

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரை சேர்ந்த ரவுடி சரவணன்(34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி சரவணன் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, உட்பட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in