வானில் வர்ணஜாலம் காட்டிய இரட்டை வானவில்; வியப்புடன் ரசித்த கோவை மக்கள்!

இரட்டை வானவில்
இரட்டை வானவில்

கோவையில் தெரிந்த இரு வானவில்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வானவில் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவையில் சனியன்று காலை வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பொழிந்து கொண்டு இருந்தது. இதன் அரிய நிகழ்வாக காட்சி அளிக்கும் வானவில் தென்பட்டது. மேலும், அதற்கு மேல் ஒரு வானவில் தென்பட்டதால் அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். மேலும், இந்த அரிய நிகழ்வை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது வானவில் புகைப்படம், வீடியோ வைரலாகி வருகிறது.

வானவில்
வானவில்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "இந்த நிகழ்வானது கோவை மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறி வருகிறது. இதுபோன்று இரண்டு வானவில்களை இதுவரை பார்த்ததில்லை. இந்த அரிய நிகழ்வு கோவையில் நடந்து இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in