கேஜ்ரிவால், ராகுலுக்கு பாகிஸ்தான் பக்கமிருந்து அதிகரிக்கும் ஆதரவு விசாரணைக்குரியது - பிரதமர் மோடி சாடல்

அர்விந்த் கேஜ்ரிவால் - ராகுல் காந்தி
அர்விந்த் கேஜ்ரிவால் - ராகுல் காந்தி
Updated on
2 min read

அர்விந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோருக்கு அதிகரிக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிர விசாரணைக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தானிலிருந்து ஆதரவுக் கரம் நீண்டிருப்பதாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களின் மத்தியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவை தீவிரமான விசாரணைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

“நம்முடன் பகை கொண்டவர்கள், நம்மில் ஒரு சிலரை மட்டும் ஏன் விரும்புகிறார்கள்; ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஆதரவுக் குரல் எழுப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது கவலைக்குரிய விஷயம்” என்று பிரதமர் மோடி விசனம் தெரிவித்தார்.

அத்தோடு "இந்தியாவின் தேர்தல் மற்றும் இந்திய ஜனநாயகம் ஆகியவை மிகவும் முதிர்ச்சியடைந்தவை. ஆரோக்கியமான மரபுகளைக் கொண்டுள்ளவை. இந்தியாவின் வாக்காளர்கள் எந்தவொரு வெளிப்புற நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் வாக்காளர்கள் அல்ல" என்றும் அந்தப் பேட்டியில் மோடி கூறினார்.

இம்ரான் கானின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சவுத்ரி என்பவர், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீன் குறித்து, தனது ஆதரவுக் கருத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். “மோடி மற்றுமொரு போரில் தோற்றிருக்கிறார். கேஜ்ரிவால் விடுதலை அடைந்திருக்கிறார். மிதவாத இந்தியாவிற்கு இதுவொரு நல்ல செய்தி" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த பதிவில் கேஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குச் சாவடியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். உடன் "அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்” என்று கருத்து பதிந்து இருந்தார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி

இதற்கு பாஜகவினர் கேஜ்ரிவாலை தாக்கும் முன்னரே, கேஜ்ரிவால் பாகிஸ்தானின் சவுத்ரிக்கு கடுமையாக பதிலளித்தார். "சௌத்ரி ஐயா, நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்சனைகளை பார்த்துக்கொள்கிறோம். உங்களது ட்வீட் எங்களுக்கு தேவையில்லை. தற்போதைய சூழலில், ​​பாகிஸ்தான் கவலைக்கிடமாக உள்ளது. அதை முதலில் பாருங்கள்" என்று சூடாக பதிவிட்டு இருந்தார்.

இதே பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி முன்னதாக, ராகுல் காந்திக்கு ஆதரவுக் கரம் நீட்டியது இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியது குறிப்பிடத்தகக்து.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in