நீட் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை:  தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் தேர்வில் எவ்விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும், வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலும் தவறு எனவும், மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 6 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மேலும் அதே மையத்தில் தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீட் தேர்வு வினாத் தாள் கசிவு
நீட் தேர்வு வினாத் தாள் கசிவு

சில இடங்களில், கேள்வித்தாளில் இருந்த ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் இருப்பதாகவும், அந்த பதில்களை எழுதாத மாணவர்களுக்கு தவறான பதில் என்பதற்கான நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இளநிலை மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

தேசிய தேர்வு முகமை
தேசிய தேர்வு முகமை

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமையின் சார்பில் மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் தவறானது. முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.”என்றார்.

மேலும், ”நாடு முழுவதும் 4,750 மையங்களில் தேர்வு நடந்தது. அதில் சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் நேரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மட்டுமே அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களும், 6 பேர் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 1,600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாகவே உள்ளன.” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in