டிடிபி, ஜேடியு கட்சிகளை அணுகுவது குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை: சரத் பவார் மீண்டும் திட்டவட்டம்!

சரத் பவார்
சரத் பவார்

தெலுங்கு தேசம் (டிடிபி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகளை அணுகுவது குறித்து இந்தியா கூட்டணியில் இதுவரை எதுவும் விவாதிக்கப்படவில்லை என அக்கூட்டணியில் உள்ள மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

இதில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஜேடியு, டிடிபி ஆகிய கட்சிகளை இந்தியா கூட்டணிக்குள் கொண்டுவந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது குறித்து தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) தலைவர் சரத் பவாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான அதிருப்தி மட்டுமின்றி விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், அதிகரித்து வரும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளைக் கையாண்ட விதத்திலும் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

டிடிபி, ஜேடியு ஆகிய கட்சிகளை இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வரலாமா என்பது குறித்து இந்தியா கூட்டணியில் இதுவரை எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. நாங்கள் எதை முடிவு செய்தாலும், அது ஒரு கூட்டு முடிவாக இருக்கும்.” என்றார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in