மைசூரு நகரம் விழாக்கோலம்... தசரா விழா கோலாகலம்... 24-ம் தேதி யானைகள் ஊர்வலம்!

மைசூரு தசரா விழா
மைசூரு தசரா விழா

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு 414-வது தசரா விழா ஆகும்.

மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தொடங்கிய தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது.  மைசூர் மன்னர் குடும்பத்தினர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து வெள்ளி சிம்மாசனம், தங்க சிம்மாசனம் ஆகியவற்றில் அமர்ந்து தர்பார் நடத்தும் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன்
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன்

தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மைசூர் அரண்மனை அலங்கரிக்கப்பட்டு ஜோலி ஜொலிக்கிறது. பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் அவற்றைக் கண்டு ரசிக்கின்றனர்.  அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in