நீட் போன்று மோசடியான தேர்வு இருக்கவே முடியாது: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

நீட் போன்று மோசடியான தேர்வு இருக்கவே முடியாது: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

"நீட் போன்ற ஒரு மோசடியான தேர்வு இருக்க முடியாது. நடைபெற்று முடிந்துள்ள நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரே தீர்வாக இருக்க முடியும்" என்று தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவிலேயே 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். அதனால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து, இந்திய அரசியலமைப்பை வணங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தென் சென்னை தொகுதி மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளனர். அதனால், பாதியில் நிற்கும் செயின்ட் தாமஸ் மவுண்ட் - வேளச்சேரி இடையேயான ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடவும், மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தென் சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை விட அதிக மக்கள் பணி செய்பவர் நான்தான் என தமிழிசை செளந்தரராஜன் கூறி, அந்த தொகுதி மக்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. எனவே, தமிழிசைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீட் தேர்வைப் போன்ற ஒரு மோசடியான தேர்வு இருக்க முடியாது. நடைபெற்று முடிந்துள்ள நீட் நுழைவுத் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரே தீர்வாக இருக்க முடியும்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in