தொலைந்து போன சாவி: நெல்லையில் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை

வாக்கு இயந்திர அறையின் பூட்டை உடைத்து வாக்கு எண்ணும் பணி துவக்கம்
வாக்கு இயந்திர அறையின் பூட்டை உடைத்து வாக்கு எண்ணும் பணி துவக்கம்

திருநெல்வேலி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள அம்பாசமுத்திரத்தில் சாவி தொலைந்ததால், ஸ்ட்ராங் ரூமின் (பாதுகாப்பு அறை) பூட்டை உடைத்து அதன் பிறகு வாக்கு எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஏழு கட்டங்களாக நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கும் எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் வாக்குப் பெட்டிகள் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 'ஸ்ட்ராங் ரூம்' சாவி தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்கு எண்ணும் பணிக்கு தாமதம் ஆகி வந்ததால், அங்கிருந்த அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளிடம் நேரம் கடந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் எங்களை அனுமதிக்காமல் உள்ளீர்கள் என கேட்டு அங்கு இருக்கக் கூடிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் கோஷமிட்ட அரசியல் கட்சி முகவர்கள்
வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் கோஷமிட்ட அரசியல் கட்சி முகவர்கள்

இதைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வெளியே எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சாவி தொலைந்துவிட்டதால் தான் அதை வைத்திருந்த அதிகாரி வரவில்லை எனவும், நேரம் கடந்து கொண்டே இருந்ததால் தற்போது பூட்டை உடைத்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in