மீண்டும் சொல்லி வைத்து அடித்த மம்தா பானர்ஜி: பாஜகவை பஞ்சராக்கிய திரிணமூல் காங்கிரஸ்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

2011 முதல் மேற்குவங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, மீண்டும் அம்மாநிலத்தில் முத்திரை பதித்துள்ளார். அம்மாநிலத்தில் 30 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்றைய வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பாஜக சுமார் 26க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னேறி தற்போது அந்த கட்சி 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்த இம்முறை பாஜக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் அங்கே போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் தேர்தல் முடிவுகளின்படி தற்போது பின்தங்கியுள்ளனர். பாங்குரா தொகுதியில் போட்டியிட்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார், கூச் பெஹார் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை இணையமைச்சரான பாஜகவின் நிசித் பிரமாணிக், பாங்கானில் பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் ஆகியோர் திரிணமூல் வேட்பாளர்களிடம் பின் தங்கியுள்ளனர்.

2019 மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 18 இடங்களில் வெற்றிபெற்று அசத்தியது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 97 இடங்களுடன் சேர்ந்து 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in