எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் - சூசகமாக பேசிய மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணி இப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆனால் நாளை அது நடக்காது என்று அர்த்தம் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், “நாட்டிற்கு மாற்றம் தேவை; நாடு மாற்றத்தை விரும்புகிறது. இந்த தீர்ப்பு மாற்றத்திற்கானது. நாங்கள் காத்திருக்கிறோம் மற்றும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இந்த தீர்ப்பு நரேந்திர மோடிக்கு எதிரானது, எனவே அவர் இந்த முறை பிரதமராக வரக்கூடாது. வேறு யாராவது பொறுப்பேற்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மற்றும் சட்டவிரோதமானது. ஜனநாயக விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இன்று இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரவில்லை, ஆனால் நாளை அது உரிமை கோராது என்று அர்த்தமல்ல. சிறிது நேரம் பொறுத்திருப்போம்.

மத்தியில் இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆட்சியில் விவாதங்கள் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினார்கள் ஆனால் இந்த முறை அதைச் செய்ய முடியாது" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மக்களவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதிப் பந்தோபாத்யாய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதர் துணைத் தலைவராகவும், கல்யாண் பானர்ஜி தலைமைக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபாவில் டெரெக் ஓ பிரையன் கட்சியின் தலைவராகவும், சகரிகா கோஷ் துணைத் தலைவராகவும், நதிமுல் ஹக் தலைமைக் கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 29 இடங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான பாஜக 12 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in