நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்... மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா அரசு திடீர் கோரிக்கை!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை

நீட் தேர்வு முடிவுகளில் நிலவும் குளறுபடிகள் காரணமாக, நடப்பாண்டு தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள்

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் தராமல் இருப்பதும் அரசியல் ரீதியாக கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்வினை கடுமையாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி உள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது.

நீட்
நீட்

பல்வேறு மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் அல்லாத அரசுகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in