மக்களவைத் தேர்தல் முடிவு: தமிழ்நாட்டில் விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம்

திருமாவளவன், சீமான்
திருமாவளவன், சீமான்

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற உள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக கூட்டணி, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

திருமாவளவன், ரவிக்குமார்
திருமாவளவன், ரவிக்குமார்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், துரை.ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அதே சமயம், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில், திருச்சி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர்கட்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது, நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெற்றது ஆகிய காரணிகள் அடிப்படையில் இந்த இரு கட்சிகளும் மாநில கட்சிகளுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதிகளை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சிகள் சார்பில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அதனை தேர்தல் ஆணையம் பரிசீலித்து மாநில கட்சிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சி அங்கீகாரம் பெற்றால், கட்சிகளின் சின்னம் உறுதி செய்யப்படுவது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in