பாஜகவின் பாசிச அரசியலை எதிர்த்து போராடுவோம் - இந்தியா கூட்டணி கூட்டத்துக்குப் பின் கார்கே பேச்சு!

கார்கே பேச்சு
கார்கே பேச்சு

பாஜகவின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல, தார்மீகத் தோல்வி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன், திரிணமூல் எம்.பி அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “ இந்திய கூட்டணியின் அனைத்து தோழர்களையும் வரவேற்கிறேன். நாங்கள் ஒன்றாகப் போராடினோம். நல்லிணக்கத்துடன் போராடினோம். முழு பலத்துடன் போராடினோம். மக்களவைத் தேர்தலின் பொதுக் கருத்து நேரடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானது. அவரது பெயரையும், முகத்தையும் முன்னிறுத்தி தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேலும் பாஜகவுக்கு பெரும்பான்மை வழங்காததன் மூலம் அவரது தலைமைக்கு பொதுமக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர்.

தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல, தார்மீகத் தோல்வியும் கூட. ஆனால் அவர்களைப்பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்த பொதுக் கருத்தை மறுக்க அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், ஒரே குரலாக மக்களுடைய தீர்ப்பை வரவேற்கிறோம். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து எதிர்ப்போம்.

பாஜகவின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்துள்ளனர். பாஜகவின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்ற பாடுபடுவோம்” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in