தமிழகத்தில் வளரும் பாஜக; மதிய நிலவரப்படி 9 தொகுதிகளில் இரண்டாவது இடம்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிற்பகல் முன்னணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளதும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதும் பாஜக தொண்டர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வெளியாகி வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 229 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதகாகவும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேபோல் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி முகத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி தலா ஒரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் கூட வெற்றி முகத்திலோ, முன்னிலையிலோ இல்லாதது அக்கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மட்டுமே முன்னணியில் உள்ளார்.

அதிமுக அதிர்ச்சி நிலவரம் இவ்வாறு இருக்க, மறுபுறம் தமிழகத்தில் மற்றொரு எதிர்க்கட்சியான பாஜக முகாம் உற்சாகத்தில் திளைத்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பின்தங்கினாலும், பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட்ட 23 தொகுதிகளில் தருமபுரியில் முன்னிலையிலும், 9 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும், 12 தொகுதிகளில் தொகுதிகளில் 3ம் இடத்திலும், நாகை தொகுதியில் 4வது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி (கோப்புப் படம்)
தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி (கோப்புப் படம்)

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பல்வேறு தொகுதிகளில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது, கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் அதிகம் பெற்றிருப்பது போன்ற காரணங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் பாஜக வெகுவாகு வளர்ந்திருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குறிப்பிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in